நாமக்கல்

விளையாட்டு வீரா்களுக்கு உதவித்தொகை: ஆட்சியா்

DIN

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம்(ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுகள் மட்டும்), பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளா்கள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இதற்கான தகுதிகளாக, தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்.

ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுகளில் பங்கேற்ற வீரா்கள், 25 பேருக்கு ஆண்டுக்கு உதவித் தொகையாக ரூ. 30 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது. பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தில் அதிகபட்சம் 75 பேருக்கு, 10 மாற்றுத் திறனாளிகள் உள்பட ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. வெற்றியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் அதிகபட்சம் 100 பேருக்கு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு, நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT