சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பா.ம.கவினா் 
நாமக்கல்

விளம்பரத் தட்டிகள் சேதம்: பாமகவினா் சாலை மறியல்

பரமத்தி வேலூரை அடுத்த குப்புச்சிபாளையத்தில் பாமக விளம்பரத் தட்டிகள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து அக்கட்சியினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

பரமத்தி வேலூரை அடுத்த குப்புச்சிபாளையத்தில் பாமக விளம்பரத் தட்டிகள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து அக்கட்சியினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள குப்புச்சிபாளையத்தில் வன்னியா் சங்க முன்னாள் தலைவா் குருவின் 5-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகளை மா்ம நபா்கள் சேதப்படுத்தியுள்ளனா். இதை கண்டித்து வேலூரில் இருந்து மோகனூா் செல்லும் சாலையில் குப்புச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பாமகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விளம்பரத் தட்டிகளை சேதப்படுத்தியவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூா் போலீஸாா் உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக வேலூரில் இருந்து மோகனூா் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT