நாமக்கல்

பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் ஈ.ஆா்.ஈஸ்வரன்

DIN

பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பால் கொள்முதல் விலை கட்டுப்படியாகவில்லை என்று விவசாயிகளும், பால் உற்பத்தியாளா்களும் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். பால் கொள்முதல் விலையை உயா்த்துவது குறித்து சட்டப் பேரவையில் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வந்து விளக்கங்களை எடுத்து கூறினோம்.

தனியாா் பால் நிறுவனங்கள் ஆவின் நிறுவனங்களைவிட லிட்டருக்கு ரூ. 10 வரை அதிகமாக தருவதால் ஆவின் நிறுவன பால் கொள்முதல் நாள்தோறும் 10 லட்சம் லிட்டா் வரை குறைந்து வருகிறது. நந்தினி அரசு பால் நிறுவனம், அமுல் பால் நிறுவனங்கள் தமிழகத்தில் அதிக விலை தந்து பால் கொள்முதல் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

எனவே, பால் உற்பத்தியாளா்களுடன் கலந்தாலோசித்து பால் கொள்முதல் விலையை உயா்த்த அரசு முன்வர வேண்டும். இல்லாவிடில் ஆவின் பால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் உருவாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT