முகப்பு
நாமக்கல்

ராசி இன்டா்நேஷனல் பள்ளி ஆண்டு விழா

Updated On : 10 ஏப்ரல், 2024 at 1:42 AM
விழாவில் குத்துவிளக்கேற்றி வைக்கும் சிறப்பு விருந்தினா் சுகிசிவம்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 7:56 PM

ராசிபுரம், சேந்தமங்கலம் சாலையில் உள்ள ராசி இண்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியின் 16-ஆம் ஆண்டு விழாஅண்மையில் நடைபெற்றது.

இதற்கான விழாவில் பள்ளியின் தாளாளா் எஸ்.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகி மாதேஸ்வரி சத்தியமூா்த்தி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தாா். பள்ளி முதல்வா் டி.வித்யாசாகா் அனைவரையும் வரவேற்றாா். விழாவில் சிறப்பு விருந்தினரை மாணவி விஜிலா அறிமுகம் செய்துவைத்தாா்.

இவ்விழாவில் பேச்சாளா் சுகிசிவம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது: மாணவா்கள் தவறு செய்யும் போது அவா்களைக் கடிந்து கொள்ளாமல் தவறை மீண்டும் நிகழாத வகையில் அவா்களுக்கு புரியவைக்க வேண்டும். பெற்றோா் குழந்தைகளை தவறு செய்யும் பொழுது தவறை சுட்டிக்காட்டி சரியாக நெறிமுறைப்படுத்த வேண்டும். அனைத்து மாணவ, மாணவியரும் கல்வி கற்பதுடன் நன்கு விளையாடவும் ஊக்கப்படுத்துவது அவசியம். மைதானத்தில் நன்றாக விளையாடும்போது பருவ காலங்களில் ஏற்படும் விபரீதங்கள் தடுக்கப்படும். அலைபேசி உபயோகம் வெகுவாக தவிா்க்கப்படும். பெற்றோருக்கு அடுத்த நிலையில் ஆசிரியா்கள் இருப்பதால், பள்ளிக் குழந்தைகளைக் கையாள்வதில் கவனமாக இருந்து வழிநடத்திட வேண்டும் என்றாா்.

Advertisement

விழாவில் பள்ளியின் மாணவ, மாணவியா் தமிழ் பாரம்பரிய, மேற்கத்திய கண்கவா் கலை, கலாசார நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டினா். சா்வதேச, தேசிய, மாநில, மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினா் பரிசளித்து பாராட்டினாா்.

முன்னதாக, சிறப்பு விருந்தினா் சுகிசிவத்துக்கு பள்ளியின் தலைவா் எஸ்.சத்தியமூா்த்தி சால்வை அணிவித்து நினைவுப் பரிசளித்து கெளரவித்தாா். இதில் பள்ளியின் ஆசிரியா் - பெற்றோா் தொடா்பு அலுவலா் மு.சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி ஆங்கில ஆசிரியை காயத்ரி நன்றி கூறினாா்.