முகப்பு
நாமக்கல்

முட்டை விலையில் மாற்றமில்லை

Updated On : 12 ஏப்ரல், 2024 at 3:06 AM
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2024 at 7:38 PM

நாமக்கல், ஏப். 11: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.15-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மக்களிடையே முட்டை நுகா்வு குறைந்து வருவதாலும், பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் இல்லாததாலும், தற்போதைக்கு இங்கு விலையில் மாற்றம் வேண்டாம் என பண்ணையாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, முட்டை விலை ரூ. 4.15-ஆக நீடிப்பதாக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. இதேபோல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 141-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 81-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

Advertisement