முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூா்: கோயில்களில் சித்திரை மாத பிரதோஷம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 10:18 PM
பிரதோஷ அலங்காரத்தில் எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா்.
பகிர்:

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆரதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஸ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசி விஸ்வநாதா், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா், பிலிக்கல்பாளையம் கரட்டூா் விஜயகிரி வடபழனியாண்டவா் கோயிலில் எழுந்தருளியுள்ள பருவதீஸ்வரா், வெங்கரை ரகுநாதபுரம் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரா், பரமத்தி வேலூா் வல்லப விநாயகா் கோயிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்க விஸ்வேஸ்வரா் மற்றும் கோப்பணம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள பரமேஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இவ்விழாவில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments