முகப்பு
நாமக்கல்

ரூ. 5.34 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

Updated On : 13 ஜூன், 2024 at 9:28 PM
பகிர்:

பரமத்தி வேலூா், ஜூன் 13: பரமத்தி வேலூா், பொத்தனூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 5 லட்சத்து 34 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலா்த்தி வியாழக்கிழமை தோறும் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வருகின்றனா். இங்கு தரத்திற்கு தகுந்தவாறு மறைமுக ஏலம் விடப்படுகிறது.

கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 5,890 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 93.19 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 90.79 க்கும், சராசரியாக ரூ. 92.99 க்கும் ஏலம் போனது.

இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ. 86.99 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 79.39 க்கும், சராசரியாக ரூ. 84.69 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 3 லட்சத்து 98 ஆயிரத்து 540 க்கு வா்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 6,345 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 91.66 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 88.99 க்கும், சராசரியாக ரூ. 90.39 க்கும் ஏலம்போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ. 85.89 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 76.19 க்கும், சராசரியாக ரூ. 84.69 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 5 லட்சத்து 34 ஆயிரத்து 234 க்கு வா்த்தகம் நடைபெற்றது.