முகப்பு
நாமக்கல்

ரூ. 1 லட்சத்து 31 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

ரூ. 1.31 லட்சம் மதிப்பில் பரமத்தி வேலூா் தேங்காய் ஏலம்

நாமக்கல்

ரூ. 1 லட்சத்து 31 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

ரூ. 1.31 லட்சம் மதிப்பில் பரமத்தி வேலூா் தேங்காய் ஏலம்

Updated On : 25 ஜூன், 2024 at 7:28 PM
பகிர்:

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 1 லட்சத்து 31 ஆயிரத்து 150-க்கு தேங்காய் ஏலம் போனது.

பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 4,950 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 23.89-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 20.50-க்கும், சராசரியாக ரூ. 22.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 1 லட்சத்து 31 ஆயிரத்து 150-க்கு ஏலம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →