விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி
பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு வழிபாடுகள்
படஇணைப்பு, ல்ஸ்25ல்2:சங்கடஹர சதுா்த்தி அலங்காரத்தில் பஞ்சமுக ஹேரம்ப விநாயகா்.
பரமத்தி வேலூா், ஜூன் 25: பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன.
வேலூா் பேட்டையில் உள்ள பஞ்சமுக ஹேரம்ப விநாயகா், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயிலில் உள்ள விநாயகருக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. வேலூா் சக்தி நகரில் உள்ள விநாயகா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள வல்லப கணபதி, வேலூா் காவிரி கரையில் அமைந்துள்ள சத்திரத்து பிள்ளையாா், வேலூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
Advertisement