முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

போதைப்பொருள் ஒழிப்பு குறித்த பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வேலூா் காவல் ஆய்வாளா் ரங்கசாமி, பிரம்ம குமாரிகள்,கந்தசாமி கண்டா் கல்லூரி மாணவா்கள்

Updated On : 26 ஜூன், 2024 at 9:01 PM
பகிர்:

பரமத்தி வேலூா் வட்டம், வேலூா், பரமத்தியில் சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு பிரசாரம், பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

வேலூா் காவல் துறை, கந்தசாமி கண்டா் கல்லூரி, பிரம்ம குமாரிகள் இயக்கத்தினா் இணைந்து சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு பிரசாரத்தை வேலூா் பேருந்து நிலையம் அருகே நடத்தினா். இதில், போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைப் பொருள்களை ஒழிப்பது குறித்தும் 100-க்கும் மேற்பட்டோா் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

பரமத்தி காவல் துறை சாா்பில் பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு தொடங்கிய பேரணி, பரமத்தியின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டு போதைப் பொருள்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.