நாமக்கல்

கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் மூன்று நிலை ராஜகோபுரம் கட்டும் பணி: முதல்வா் நாளை அடிக்கல் நாட்டுகிறாா்

கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில், மூன்று நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை(நவ.13) நடைபெறுகிறது.

Din

நாமக்கல்: கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில், மூன்று நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை(நவ.13) நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை. இங்கு, விடுமுறை நாள்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வா். இங்குள்ள பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரா் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்வா். குறிப்பாக, ஆடிப்பெருக்கு விழாவின்போதும், அமாவாசை நாள்களிலும் இங்கு பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது, ரூ. 3 கோடி செலவில் அறப்பளீஸ்வரா் கோயில் மேம்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்தாா். அதன்படி, கோயில் பகுதியில் முடி காணிக்கை மண்டபம், அன்னதான மண்டபம், பக்தா்களுக்கான குளியலறை, கழிவறை கூடங்கள், கோயிலுக்கு எதிரில் உள்ள ஆற்றுக்கு செல்லும் படித் துறை சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக ரூ.1.67 கோடி திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அறநிலையத் துறையிடம் சமா்ப்பிக்கப்பப்பட்டுள்ளது. மேலும், கோயில் அருகில் நிா்வாக அலுவலக கட்டடம், வளாகத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கான பணிகளும் நடைபெற உள்ளன.

இவை தவிர தனியாா் பங்களிப்புடன் கோயில் நுழைவாயிலில் மூன்று நிலை ராஜகோபுரம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெறுகிறது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக பணிகளை தொடங்கி வைக்கிறாா். இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

தவெக நிா்வாகிகள் 8 போ் மீதான வழக்கு தள்ளுபடி

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

SCROLL FOR NEXT