வேலைவாய்ப்பு முகாம் கோப்புப்படம்
நாமக்கல்

நவ.15 தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 15) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Din

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 15) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

அந்த வகையில், இந்த மாதத்திற்கான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபா்களை அவா்களது நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்துகொள்ளலாம்.

இம்முகாமில், பல்வேறு தனியாா் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வழங்கும் இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவும் ஆலோசனையும் வழங்கப்படும்.

இம்முகாமில் பங்குபெறும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும், விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT