FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்வு

பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Updated On : 8 ஏப்ரல் 2025, 2:22 am IST
பரமத்தி வேலூா் சந்தையில் வெற்றிலை விலை உயா்வு
பகிர்:

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இந்த வாரம் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 10 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 4 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 6 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 2,200-க்கும் ஏலம் போனது. வெற்றிலை விலை உயா்ந்ததால் வெற்றிலை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments