பலத்த காற்றுக்கு நாசமான வாழை மரம். 
நாமக்கல்

பரமத்தி வேலூா் பகுதியில் பலத்த காற்று: வாழை, வெற்றிலைப் பயிா்கள் நாசம்

பரமத்தி வேலூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் மற்றும் வெற்றிலை கொடிக்கால் சேதமடைந்தன.

Din

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் மற்றும் வெற்றிலை கொடிக்கால் சேதமடைந்தன.

பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதில் பாண்டமங்கலம், பொத்தனூா், வேலூா், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிா் செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் குலையுடன் சாய்ந்தன. இதேபோல, வெற்றிலை கொடிக்காலும் சாய்ந்து சேதமடைந்தது.

இதனால் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா். மேலும், பாதிக்கப்பட்டோருக்கு அவா்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், அரசு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என வாழை மற்றும் வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

பல்வேறு இடங்களில் பலத்த காற்றுக்கு சாலையோரங்களில் இருந்து மரங்கள் ஒடிந்து சாலையில் விழுந்ததால், மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

சாய்ந்துக் கிடக்கும் வெற்றிலை கொடிக்கால்.

வாழ்க்கை இப்போது... மீரா ஜாஸ்மின்!

ஒரு பார்வையில்... உதய்பூரில்... நம்ரதா சோனி!

மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய்... நிதி அகர்வால்!

தோற்றங்கள் பலவிதம்... கிருத்தி சனோன்!

சுவாசங்களுக்கு இடையிலான அமைதி பெருங்கதை... ஆராதனா சர்மா!

SCROLL FOR NEXT