முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ. 1.48 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

வேளாண்மை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.48 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்போனது.

நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ. 1.48 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

வேளாண்மை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.48 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்போனது.

Updated On : 8 ஏப்ரல், 2025 at 7:00 PM
பகிர்:

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள வேளாண்மை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.48 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்போனது.

பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 3950 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 57.29-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 38.41-க்கும், சராசரியாக ரூ. 56.29-க்கும் தேங்காய் ஏலம்போனது. மொத்தம் ரூ. 47550 -க்கு தேங்காய் ஏலம் போனது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 5 ஆயிரம் கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 60.19-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 44.29- க்கும், சராசரியாக ரூ. 57.57-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 1 லட்சத்து 48 ஆயிரத்து 99-க்கும் தேங்காய் ஏலம்போனது.

முழு கட்டுரையைப் படிக்க →