பரமத்தி வேலூரில் ரூ. 6 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 6 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 6 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.
பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 11,195 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 56.29-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 40.10-க்கும், சராசரியாக ரூ. 54.90-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 6 லட்சத்து 14 ஆயிரத்து 623-க்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
இந்த வாரம் செவ்வாய்க்கிழமை (டிச. 16) நடைபெற்ற ஏலத்துக்கு 10 ஆயிரத்து 711 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 56.89-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 40.30-க்கும், சராசரியாக ரூ. 56.56-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 6 லட்சத்து 5 ஆயிரத்து 833-க்கும் தேங்காய் ஏலம் நடைபெற்றது.