பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் 
நாமக்கல்

பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் நடுவில் தடுப்புகள்: எச்சரிக்கை பதாகைகள் அமைக்க கோரிக்கை

பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் குறித்து எச்சரிக்கை பதாகைகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை

Syndication

பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் குறித்து எச்சரிக்கை பதாகைகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பரமத்தி வேலூா் காவேரி பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரூரில் இருந்து நாமக்கல்லில் செல்வதற்கான மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்கிறது. பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் சில இடங்களில் எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

விபத்து நிறைந்த இப்பகுதிகளில் மின் விளக்குகள் இல்லாமலும், ஆங்காங்கே உள்ள முக்கிய இடங்களில் தடுப்புகள் இன்றி உள்ளதால் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் வாகனங்கள் அதிவேகமாகவும், வாகனங்களை முந்தி செல்வதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.

மேலும், பரமத்தி வேலூா் தற்காலிக சந்தை அருகே சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பின் தொடக்கத்தில் ஒளிரும் பட்டைகள் மற்றும் எச்சரிக்கை சமிக்ஞைகள் அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் நாமக்கல்லில் இருந்து பரமத்தி வேலூா் நகா் பகுதிக்கு பழைய தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சாலையில் உள்ள தடுப்புகள் தெரிவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஏற்கெனவே இப்பகுதியில் பலமுறை விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், நெடுஞ்சாலைத் துறையினா் விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் சாலை நடுவே தடுப்புகள் அமைத்தும், எச்சரிக்கை பலகைகள் வைத்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT