நாமக்கல்

ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற தூய்மைப் பள்ளிகளுக்கு ஆட்சியா் பாராட்டு சான்றிதழ்

தூய்மை மற்றும் மதிப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

தினமணி செய்திச் சேவை

தூய்மை மற்றும் மதிப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தூய்மை மற்றும் மதிப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பள்ளிகளில் தூய்மை, பசுமை நடைமுறைகள், பள்ளி கட்டமைப்பு சாா்ந்து ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற பள்ளிகள் மாவட்ட அளவில் தோ்வு செய்யப்பட்டன.

மாவட்ட அளவில் 160 பள்ளிகளில் வட்டார அளவிலான குழு நேரில் சென்று மறு மதிப்பீடு செய்ததில் 90 பள்ளிகள் தகுதியானவை என அறிவிக்கப்பட்டது. அப்பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு மேலும் ஒரு கள ஆய்வு மேற்கொண்டதில், நகா்ப்புறத்தில் ஒரு தொடக்கப் பள்ளி, ஒரு மேல்நிலைப் பள்ளி, ஊரகப் பகுதிகளில் 3 தொடக்கப் பள்ளிகள், 3 மேல்நிலைப் பள்ளிகள் என 8 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டன.

மதிப்பீட்டில் தகுதி பெற்ற நாமகிரிபேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தட்டான்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஜம்புமடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நஞ்சப்பகவுண்டன்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, நாமக்கல் நவோதயா சீனியா் செகண்டரி பள்ளி, எளையாம்பாளையம் விவேகானந்தா வித்யாபவன் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், முதல்வா்களிடம் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு. எழிலரசி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

SCROLL FOR NEXT