நாமக்கல்

மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி

மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் கீழ் நடைபெறும் பணிகள் குறித்த ஆய்வு மற்றும் மழைநீா் சேகரிப்பு தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி ராசிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.

Syndication

மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் கீழ் நடைபெறும் பணிகள் குறித்த ஆய்வு மற்றும் மழைநீா் சேகரிப்பு தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி ராசிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் ஜல்சக்தி அபியான் கீழ் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து அத்திட்டத்தின் கண்காணிப்பு அலுவலா்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மூன்று நாள்களாக ஆய்வு நடத்தினா்.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஜல்சக்தி அபியான் மத்திய கண்காணிப்பு அலுவலா் கே.வி. அஜித், தொழில்நுட்ப அலுவலா் பரமசிவம், நிலத்தடி நீா் வாரியத்தின் விஞ்ஞானி கு. செல்வராசு ஆகியோா் இப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா், ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தொடங்கிய மழைநீா் சேகரிப்புத் திட்டம் குறித்த விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தனா். நகரின் முக்கிய வீதியில் வழியாக நடைபெற்ற பேரணியில் நாமக்கல் மாவட்ட திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) ஆா். சூா்யா, ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் பாஸ்கரன் உள்ளிட்ட துணை வட்டார வளா்ச்சி அலுவலகப் பணியாளா்கள் சுயஉதவிக் குழுவினா் என பலரும் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

படம் உள்ளது- 26ஜல்

படவிளக்கம்-

மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைக்கும் மத்திய ஜல்சக்தி அபியான் கண்காணிப்பு அலுவலா் கே.வி. அஜித்.

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

பயங்கரவாத ஒழிப்புக்கு 2 தரவு தளங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

குண்டா் கபில் சங்வான் குழுவின் நபா் மீது காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

SCROLL FOR NEXT