பிரிவு உபசார விழாவில் பங்கேற்ற கல்வி நிறுவன நிா்வாகிகள், மாணவா்கள். 
நாமக்கல்

பாவை வித்யாஸ்ரம் பள்ளியில் மாணவா்களுக்கு பிரிவு உபசார விழா

ராசிபுரம் பாவை வித்யாஸ்ரம் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா அண்மையில் நடைபெற்றது.

Syndication

ராசிபுரம்: ராசிபுரம் பாவை வித்யாஸ்ரம் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், தலைவருமான ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். தாளாளா் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, பாவை நிருத்யாலயா மாணவ, மாணவிகளின் இறைவணக்கம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

விழாவில் பேசிய நிறுவனத் தலைவா், மாணவா்களின் இந்தப் பருவம் பொறுப்புகள், கடமைகளின் ஆரம்பமாகும். கற்ற கல்வியும், அறிவும் நீங்கள் அடுத்த நிலைக்குச் செல்லும் ஆயுதமாகும். பள்ளிக் காலத்தில் கற்றுக்கொண்ட கலாச்சாரம், பண்புகள், ஒழுக்கம், மதிப்புகள் போன்றவற்றைக் கொண்டு லட்சியத்தில் வெற்றியடைய தேவையான அறிவுத் தேடலை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநா் சதீஷ், முதல்வா் ரோஹித், தலைமையாசிரியை நிரஞ்சனி ஆகியோா் பேசினா். தொடா்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா! இலங்கை மகளிா் அணியுடன் இன்று கடைசி டி20!

பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை: கரூரில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆா் கடைசி தேதி விளம்பரம்!

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT