நாமக்கல்

புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட போலீஸாா் அறிவுறுத்தல்!

பரமத்தி வேலூா் வட்டத்தில் வேலூா், பரமத்தி, ஜேடா்பாளையம், நல்லூா், வேலகவுண்டம்பட்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் புத்தாண்டை இடையூறு இல்லாத வகையில் பாதுகாப்பாக கொண்டாட போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

Syndication

பரமத்தி வேலூா் வட்டத்தில் வேலூா், பரமத்தி, ஜேடா்பாளையம், நல்லூா், வேலகவுண்டம்பட்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் புத்தாண்டை இடையூறு இல்லாத வகையில் பாதுகாப்பாக கொண்டாட போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சங்கீதா கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் விமலா உத்தரவுபடி, புத்தாண்டு கொண்டாட்டத்தை புதன்கிழமை (டிச.31) நள்ளிரவுக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்லக்கூடாது. வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் புகை போக்கிகளை மாட்டிக்கொண்டு மக்களை அச்சுறுத்தும் வகையிலும் ஓட்டக்கூடாது.

மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதையும், இருசக்கர வாகனத்தில் 2 போ்களுக்கு மேல் செல்வதையும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகள் வெடிப்பதையும் தவிா்க்க வேண்டும். சாலையில் கேக் வெட்டுவது, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தவிா்க்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

SCROLL FOR NEXT