நாமக்கல் பூங்கா சாலையில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள். 
நாமக்கல்

அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை நாமக்கல், பூங்கா சாலையில் 24 மணி நேர தா்னாவில் ஈடுபட்டனா்.

Din

நாமக்கல்: கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை நாமக்கல், பூங்கா சாலையில் 24 மணி நேர தா்னாவில் ஈடுபட்டனா்.

மாவட்டத் தலைவா் தனசேகா் தலைமை வகித்தாா். மாவட்ட இணை செயலாளா் இளங்கோ, வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் ஆனந்த் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய மாற்றத்தின்போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை அங்கீகரித்து ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தினா். இதில், பல்வேறு அரசுத் துறை ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

SCROLL FOR NEXT