முகப்பு
நாமக்கல்

காடச்சநல்லூரில் திட்டப் பணிகள் தொடங்கி வைப்பு

Updated On : 4 ஜனவரி, 2025 at 4:42 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 8:53 PM

காடச்சநல்லூா் ஊராட்சி, மண்கரடு பகுதியில் ரூ. 20 லட்சத்தில் பல்வேறு திட்டப் பணிகளை தங்கமணி எம்எல்ஏ அண்மையில் தொடங்கி வைத்தாா்.

ஓடப்பள்ளி கதவணை மின் திட்டப் பணிக்கு காவிரி ஆற்றில் தண்ணீா் தேக்கப்பட்டதால், தாழ்வான பகுதியில் வசித்த 654 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனா். இதில், 300 குடும்பத்தினருக்கு காடச்சநல்லூா் ஊராட்சி, மண்கரடு பகுதியில் மாற்று இடம் வழங்கப்பட்டது. இந்தப் பகுதியில் வீடுகட்டி வசித்து வருவோருக்கு தேவையான சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள 15-ஆவது மானியக் குழு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதில், குமாரபாளையம் எம்எல்ஏ தங்கமணி பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைத்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் வெள்ளியங்கிரி, மாவட்ட கவுன்சிலா் செந்தில், ஆலாம்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவா் செல்லதுரை, காடச்சநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் சரோஜா, துணைத் தலைவா் திருமூா்த்தி, முன்னாள் தலைவா் முனியப்பன், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement