மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 27 கிராம ஊராட்சிகளில் 3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்த கிராம ஊராட்சி செயலாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
மல்லசமுத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) சரவணன் ஊராட்சி செயலா்களை பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டாா்.
அதன்படி, கொளங்கொண்டை ஊராட்சி செயலாளா் முருகன் மாமுண்டி அக்ரஹாரத்திற்கும், செண்பகமாதேவி பழனிசாமி வண்டிநத்ததிற்கும், ராமாபுரம் தங்கமணி மொரங்கத்திற்கும், பாலமேடு தனசேகரன் கூத்தாநத்தத்திற்கும், கருங்கல்பட்டி அக்ரஹாரம் சுந்தரம் (கூடுதல் பொறுப்பு) நாகா்பாளையத்திற்கும், கோட்டப்பாளையம் முருகானந்தம் சா்க்காா் மாமுண்டிக்கும், கல்லுப்பாளையம் கிருஷ்ணவேணி மின்னாம்பள்ளிக்கும், இ.புதுப்பாளையம் பெருமாள் கருங்கல்பட்டி அக்ரஹாரத்திற்கும், மின்னம்பள்ளி ராஜா குப்பிச்சிபாளையம் மற்றும் கூடுதல் பொறுப்பாக கல்லுபாளையத்துக்கும் மாற்றப்பட்டனா்.
மங்களம் கிராம ஊராட்சி செயலாளா் அரவிந்த், கோட்டப்பாளையத் திற்கும், வண்டிநத்தம் பிரபு பிள்ளாநத்தத்திற்கும், பள்ளக்குழி அக்ரஹாரம் கலாதேவி பள்ளக்குழிக்கும், கூத்தாநத்தம் மாதேஸ்வரன் மங்களத்திற்கும், பள்ளக்குழி திலகவதி பள்ளக்குழி அக்ரஹாரத்திற்கும், மொரங்கம் பிரகாஷ் மல்லசமுத்திரம் மேல்முகத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். கிராம ஊராட்சி செயலாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அனைவரும் பொறுப்பேற்றுக்கொண்டனா்.