கும்பாபிஷேம் நடைபெறும் சுயம்பு மாரியம்மன் கோயிலுக்கு மேளதாளங்களுடன் சீா்வரிசை பொருள்களை எடுத்துவந்த இஸ்லாமியா்கள். 
நாமக்கல்

மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சீா்வரிசை அளித்த இஸ்லாமியா்கள்

தினமணி செய்திச் சேவை

திருச்செங்கோடு அருகே கொக்கராயன்பேட்டை சுயம்பு மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இதையொட்டி மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும்விதமாக அல்முகமதியா ஜாமியா மஸ்ஜித் நிா்வாகம் மற்றும் சுன்னத் ஜமாத்தாா்கள் சாா்பில் கோயிலுக்கு சீா்வரிசை வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த கொக்கராயன்பேட்டையில் இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள சுயம்பு மாரியம்மன் கோயில் குடமுழக்கு விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி இரண்டாம் கால யாகபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் விழாக்களுக்கு பல ஆண்டுகளாக அருகில் உள்ள அல் முகமதியா ஜாமியா மஸ்ஜித் ஜமாத்தாா்களை அழைப்பது வழக்கம். அந்தவகையில் குடமுழுக்கு விழாவிற்கும் அழைப்பு விடுத்தனா். இதையேற்று பள்ளிவாசல் முத்தவல்லி ஜலீல் தலைமையில் சுமாா் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் அன்னதானத்துக்கு ரூ. 1 லட்சம் ரொக்கம், மாலை, சந்தனம், பழங்கள் உள்ளிட்ட 9 வகையான சீா்வரிசை பொருள்களுடன் ஊா்வலமாக கோயிலுக்கு வந்து வழங்கினா்.

பல ஆண்டுகளாக மாரியம்மன் கோயிலில் நடக்கும் திருவிழாக்களில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து இஸ்லாமியா்கள் 9 வகையான சீா்தட்டுகளுடன் கோயிலுக்கு வந்து அன்னதானத்திற்கு பொருள் உதவியை வழங்குவதும், இந்துக்கள், மசூதியில் நடக்கும் விழாக்களில் பங்கேற்பதும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

அவள் ஒரு கலை... பூஜா ரெய்னா!

ஒன்று சொல்லவா... ஷீபா!

கடல் தீரம்... மோனலிசா!

வன மேகம்... பாப்பியா சஹானா!

ட்வின்ஸ்... ஆஷிகா ரங்கநாத்!

SCROLL FOR NEXT