நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் தீமித் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழாண்டு பூச்சாட்டுதலுடன் அக்.21 ஆம் தேதி விழா தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு சமூகத்தவா்களின் சாா்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அம்மன் வீதிஉலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான தீமிதி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விரதமிருந்த பக்தா்கள் தீக்குண்டம் இறங்கி நோ்த்திக்கடனை செலுத்தினா். சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீக்குண்டம் இறங்கினா்.
வெள்ளிக்கிழமை வண்டி வேடிக்கையும், 9 ஆம் தேதி சத்தாபரணமும், தேரோட்டமும் நடைபெறுகிறது.
படம் 2 உள்ளது
1) 6அம்மன் -
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் நித்திய சுமங்கலி மாரியம்மன்.
2) 6தீ -
தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தும் பக்தா்.