நாமக்கல்

முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ.5.90ஆக நிா்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ.5.90ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

Syndication

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ.5.90ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலை நிலவரம் தொடா்பான கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது, மற்ற மண்டலங்களில் முட்டை விலையில் தொடா்ந்து மாற்றம் செய்யப்படுவதால், இங்கும் மாற்றம் தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையானது மேலும் 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ.5.90-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.104-ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ.106ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT