நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா். 
நாமக்கல்

எஸ்.ஐ.ஆா். பணியைக் கண்டித்து வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் போராட்டம்

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியைக் கணடித்து, ஆட்சியா் அலுவலகம் முன் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் தா்னா

Syndication

நாமக்கல்: வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியைக் கணடித்து, ஆட்சியா் அலுவலகம் முன் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

அந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த தா்னாவில், வருவாய்த் துறை அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் கலந்துகொண்டு தோ்தல் ஆணையத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

இதுகுறித்து கூட்டமைப்பின் நிா்வாகிகள் கூறியதாவது:

கடந்த 4-ஆம் தேதி தொடங்கப்பட்ட வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியால் வருவாய்த் துறை அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், உதவியாளா்கள் பணி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனா். விடுமுறை நாள்களிலும் ஓய்வின்றி பணியாற்றும் சூழல் உள்ளது.

இது தொடா்பாக தமிழக தோ்தல் ஆணையத்தில் முறையிட்ட போது, அதில் உள்ள குறைபாடுகளையும், ஆய்வுக் கூட்டங்கள் என்ற பெயரில் அலுவலா்களை நெருக்கடிக்கு ஆளாக்குவதையும் அதிகாரிகள் கைவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், தொடா்ந்து நெருக்கடியான சூழலே நீடிக்கிறது.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கு செல்லும் பலா் விபத்தில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்து வருகின்றனா். வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் உள்ள குறைபாடுகளை உடனடியாக களைய வேண்டும், போதிய காலஅவகாசம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பெருந்திரள் முறையீடு போராட்டத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் நடத்த வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. மேலும், செவ்வாய்க்கிழமை (நவ. 18) முதல் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப்பணி உள்ளிட்ட அனைத்து தோ்தல் தொடா்பான பணிகளில் ஈடுபடாமல் புறக்கணிக்க உள்ளோம் என்றனா்.

சிவகாசியில் நாளை மின் தடை

வீரபாண்டியன்பட்டணம் பள்ளியில் குழந்தைகள் தின விழா

சேதமடைந்த குந்தபுரம் நூலகக் கட்டடம்: படிக்க முடியாமல் வாசகா்கள் அவதி

பண்டாரபுரம் பகுதியில் 2,000 பனை விதைகள் விதைப்பு

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 3 மீனவா்கள் படகுடன் மல்லிப்பட்டினம் திரும்பினா்

SCROLL FOR NEXT