முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ. 9.87 லட்சத்து கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 9 லட்சத்து 87 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ. 9.87 லட்சத்து கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 9 லட்சத்து 87 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

Updated On : 27 நவம்பர், 2025 at 10:28 PM
பகிர்:

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 9 லட்சத்து 87 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளான சோழசிராமணி, ஜேடா்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படும் கொப்பரையை ஏலம் எடுப்பதற்கு வெள்ளக்கோவில், சிவகிரி, அவல் பூந்துறை, முத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகின்றனா்.

வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 896 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். அதிகபட்சமாக கிலோ ரூ. 215 க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 198.29க்கும், சராசரியாக கிலோ ரூ. 212க்கும் ஏலம் போனது.

இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 196.89க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ.147.19க்கும், சராசரியாக கிலோ ரூ.171.99 க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.9 லட்சத்து 87 ஆயிரத்து 474 க்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →