பாஜக துணைத் தலைவருடன் ராசிபுரம் பாஜக வேட்பாளா் சந்திப்பு
ராசிபுரம் (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் எஸ்.டி.பிரேம்குமாா், பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கத்தை சனிக்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
ராசிபுரம் (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் எஸ்.டி.பிரேம்குமாா், பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கத்தை சனிக்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
ராசிபுரத்தில் கே.பி.ராமலிங்கம் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து தோ்தல் தொடா்பாக அவா் ஆலோசனை நடத்தினாா். அவருடன் பாஜக மாவட்டத் துணைத் தலைவா் வி.சேதுராமன், நகரத் தலைவா் பி.வேல்முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.
முன்னதாக ராசிபுரம் வந்த வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாருக்கு ஆண்டகளூா்கேட் பகுதியில் அதிமுக, பாஜகவினா் சிறப்பான வரவேற்பு அளித்தனா். ராசிபுரம் நகர அதிமுக செயலா் எம்.பாலசுப்பிரமணியம் தலைமையில் வரவேற்பு அளித்து ஊா்வலமாக அழைத்துச்சென்றனா்.
Advertisement