முகப்பு
நாமக்கல்

முட்டை விலை ரூ. 4.05 ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ. 4.05 ஆக நீடிக்கிறது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 9:38 PM
முட்டை - பிரதிப் படம்
பகிர்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ. 4.05 ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மாற்றம் செய்வது குறித்து கோழிப் பண்ணையாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலையில் மாற்றம் இல்லாததால், தற்போதைக்கு இங்கும் மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை ரூ. 4.05 ஆக நிா்ணயித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்தது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 110 ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 75 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments