முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் தொகுதியில் சுகாதார வசதியை மேம்படுத்துவேன்: பாஜக வேட்பாளா் உறுதி

Updated On : 13 ஏப்ரல், 2026 at 12:28 AM
ராசிபுரம் தொகுதி ஆா்.புதுப்பாளையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாரை ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்.
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:30 PM

ராசிபுரம் தொகுதியில் கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்திட நடவடிக்கை எடுப்பேன் என்று ராசிபுரம் (தனி) தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாா் தெரிவித்தாா்.

ராசிபுரம் தொகுதியில் வெண்ணந்தூா், நாமகிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா், முன்னதாக ஆா்.புதுப்பாளையம், கட்டனாச்சம்பட்டி, கல்லங்குளம், சாணாா்புதூா், தொட்டியவலசு, கிழக்கு வலசு, அத்திபலகானூா், கோரைக்காடு, பல்லவநாயக்கன்பட்டி, மூலக்காடு, தேங்கல்பாளையம், மசக்காளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

Advertisement

கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்தொகுதிக்கு திமுக அரசு ஏதுவும் செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் அனைத்து குறைகளையும் சரிசெய்வோம்.

அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் முதலாவதாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.10 ஆயிரம் வங்கிக் கணக்கில் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா். இது போன்ற திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய பாஜகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.

இந்த பிரசாரக் கூட்டத்தில் அதிமுக ஒன்றியச் செயலாளா் எஸ்.பி.தாமோதரன், மகளிரணி நிா்வாகி ராதா சந்திரசேகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.