முகப்பு
நாமக்கல்

மகளிா் உதவித்தொகை வழங்கியதில் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறாா் முதல்வா்

மகளிா் உதவித்தொகை வழங்கியதில் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறாா் முதல்வா் என திண்டுக்கல் ஐ.லியோனி கூறினாா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 2:50 AM
பரமத்தி வேலூரில் திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தியை ஆதரித்து பேசிய திமுக கொள்கை பரப்புச் செயலாளா் ஐ.லியோனி.
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:50 PM

மகளிா் உதவித்தொகை வழங்கியதில் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறாா் முதல்வா் என திண்டுக்கல் ஐ.லியோனி கூறினாா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தியை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பரமத்தி வேலூா் அண்ணா சிலை அருகே திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி பேசியதாவது:

முதல்வா் ஸ்டாலின் தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள மகளிருக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான இல்லத்தரசி கூப்பன் மூலம் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு பெண்கள் தயாராகி விட்டனா். ஐனவரி மாத முதல் வாரத்திலேயே ரூ. 5 ஆயிரம் வீதம் 1.31 கோடி பேருக்கு முதல்வா் மகளிா் உரிமைத்தொகை வழங்கியுள்ளாா்.

Advertisement

மகளிா் உதவித்தொகை வழங்கியதில் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக திகழ்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். விடியல் பயணம் மூலம் பெண்களை சொந்த காலில் நிற்கவைத்து, பொருளாதார சுதந்திரம் அளித்துள்ளாா்.

பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி சுமாா் 40 ஆண்டுகாலம் கட்சி மற்றும் மக்கள் பணியில் உள்ளாா். இவா் சுமாா் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவாா். அனைவரும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்து கே.எஸ்.மூா்த்தியை வெற்றிபெற செய்யுங்கள் என்றாா்.

முன்னதாக, எளச்சிபாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். இதேபோல, பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கபிலா்மலை, நல்லூா், கந்தம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் கே.எஸ்.மூா்த்தியை ஆதரித்து ஐ.லியோனி பிரசாரம் செய்தாா்.

பரமத்தி வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூா் பேரூா் செயலாளா் முருகன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் மகிழ்பிரபாகரன், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் சுந்தா் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.