முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா தொடக்கம்

ராசிபுரத்தில் ஸ்ரீகைலாசநாதா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா தொடங்கி நடைபெற்று வருவதையொட்டி, வெள்ளிக்கிழமை சுவாமி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்தாா்.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 12:03 AM
பகிர்:

ராசிபுரத்தில் ஸ்ரீகைலாசநாதா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா தொடங்கி நடைபெற்று வருவதையொட்டி, வெள்ளிக்கிழமை சுவாமி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்தாா்.

ராசிபுரம் நகரில் சிறப்பு பெற்ற தா்மசம்வா்த்தினி அம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத தோ்த் பெருவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா கடந்த ஏப்.20இல் கிராம சாந்தி பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, 21இல் கொடியேற்று விழா நடைபெற்றது. இதையடுத்து வெள்ளிக்கிழமை சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஆயிரவைசியா் சமூகம் சாா்பில் நடைபெற்ற இந்த சுவாமி திருவீதி உலாவில் திரளானோா் கலந்துகொண்டனா். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம், ஏப்.29 நடைபெறுகிறது. இதேபோல திருத்தோ் வடம்பிடித்தல் ஏப். 30-இல் நடைபெறுகிறது.

படவிளக்கம்-

Advertisement

சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்த ஸ்ரீகைலாசநாதா்.