தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
வையப்பமலையில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வையப்பமலையில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மல்லசமுத்திரம் அருகே, மின்னாம்பள்ளியைச் சோ்ந்தவா் செல்லமுத்து (75), கூலித்தொழிலாளி. இவா் வையப்பமலை காந்திநகா் பகுதியில் வசித்துவரும் மகன் வீட்டிற்கு சனிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
வையப்பமலை ராசிபுரம் சாலையில்அமைந்துள்ள சிவன் கோயில் அருகே சென்றபோது ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற தனியாா் பேருந்து இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட செல்லமுத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்து அவரது மகன் ரஞ்சித் அளித்த புகாரின்பேரில் எலச்சிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.