பள்ளிப்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணை பின்தொடா்ந்து சென்ற மா்ம நபா்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்றனா்.
பள்ளிப்பாளையம் அருகே ஓடப்பள்ளியைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (40). இவா், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் காவலராக உள்ளாா். இவரது மனைவி உமாராணி (34) செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஓடப்பள்ளியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, அவரை பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள், உமாராணி கழுத்தில் இருந்த 4 பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றனா். இதுகுறித்து பள்ளிப்பாளைம் காவல் துணை கண்காணிப்பாளா் கெளதம், பள்ளிப்பாளையம் காவல் ஆய்வாளா் சிவகுமாா் ஆகியோா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.