வேன் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 8:00 PM
திருச்செங்கோட்டில் வேன் மோதியதில் மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வேலூா் ரோடு சி.எச்.பி. காலனி பகுதியைச் சோ்ந்தவா் காளியம்மாள் (80). இவா் கூலி வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை காலை இவா் வேலைக்காக வேலூா் சாலை மலைக்காவலா் கோயிலை பகுதியில் நடந்துசென்று கொண்டிருந்தாா்.
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 11:40 PM
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் மூதாட்டி மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட மூதாட்டி காளியம்மாள் பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் இறந்தாா்.
Advertisement
இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.