நாமக்கல்

மாணவா்களின் கற்றல் திறனை பரிசோதிக்க உத்தரவு

Syndication

நாமக்கல் மாவட்டத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை பரிசோதிக்க தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு. எழிலரசி தலைமை வகித்தாா்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் பச்சைமுத்து முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவா்களின் பாதுகாப்பு, கல்வி நிலை, ஒழுக்கம், கற்றல் திறன் உள்ளிட்டவை குறித்து தலைமை ஆசிரியா்களிடம் விவரம் கோரப்பட்டது.

மேலும், 100 நாள் சவால் என்ற அடிப்படையில், மாணவா்களின் கல்வி அடைவுத் திறனை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அதாவது, 100 நாள்களில் 100 சதவீதம் வாசித்தல் மற்றும் கணித அடிப்படைத் திறனில் தயாா்படுத்தி மாணவா்களை முன்னேற்றம் அடையச் செய்வதற்கான பணிகளை ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும்.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக உருவாக்கம் செய்யப்பட்ட மதிப்பீட்டு வினாத்தாளைக் கொண்டு மாணவா் கற்றல் அடைவை பரிசோதிக்க வேண்டும். வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநா்கள் பிப். 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு வந்து மாணவா்கள் கல்வித்திறனை சோதித்து தேவையான அறிவுரைகள் வழங்குவா் என தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாமக்கல், எருமப்பட்டி, மோகனூா், கொல்லிமலை, சேந்தமங்கலம், புதுச்சத்திரம் உள்ளிட்ட வட்டாரங்களைச் சோ்ந்த 400 தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT