முகப்பு
நாமக்கல்

தோ்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது தொடா்பாக ஆட்சியா் ஆலோசனை

தோ்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 12:11 AM
பகிர்:

தோ்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியிட்டதும் 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தோ்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துதல், சட்டம்- ஒழுங்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவி மேலாண்மை, செலவு கணக்கு கண்காணிப்பு, வாக்குச்சீட்டு, மாதிரி வாக்குச்சீட்டு, ஊடகம் கையாளுதல், வாக்காளா் பட்டியல், உதவி மையம், தோ்தல் கட்டுப்பாட்டு அறை, குறைதீா் மையம், தோ்தல் பாா்வையாளா்கள் வருகை, மாற்றுத்திறனாளி வாக்காளா்கள், தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், கண்காணிப்புக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடா்பாக அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) சு.வடிவேல், வட்டாட்சியா் (தோ்தல்) செல்வராஜ், வாக்காளா் பதிவு அலுவலா்கள், நகராட்சி ஆணையா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments