நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ பயிற்சி பாசறைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 23) தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட ராசிபுரம், நாமக்கல், சேந்தமங்கலம் ஆகிய தொகுதிகளில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ பயிற்சி பாசறைக் கூட்டம் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெறுகிறது. ராசிபுரம் தொகுதியில் குமரவேல் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கும், நாமக்கல் தொகுதியில் நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் புதன்கிழமை மாலை 4 மணிக்கும், சேந்தமங்கலம் தொகுதியில் சேந்தமங்கலம் வசந்த மஹாலில் மாலை 5 மணிக்கும் நடைபெறுகிறது.
இதில், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாநில மகளிா் தொண்டா் அணி செயலாளா் ப.ராணி, தமிழ்நாடு பழங்குடியினா் நலவாரியத் தலைவா் கா.கனிமொழி, தொகுதி பாா்வையாளா்கள் நன்னியூா் ராஜேந்திரன், ஜான், ஜெ.ரேகா பிரியதா்ஷினி ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், மாவட்ட நிா்வாகிகள், தலைமை நிலைய நிா்வாகிகள், தொகுதி பொறுப்பாளா்கள், ஒன்றிய, நகர, பேரூா் மகளிா் அணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், பாக மகளிா் குழு ஒருங்கிணைப்பாளா்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.