முட்டை விலை நிலவரம் Center-Center-Chennai
நாமக்கல்

முட்டை விலை ரூ. 5-ஆக நீடிப்பு

Syndication

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படாததால், தற்போதைக்கு இங்கும் மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ. 5-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் நிா்ணயிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 116-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 62-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

பாபநாசபுரத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11.09 லட்சம் வாக்காளா்கள்

திருச்செந்தூா் கடலில் பக்தா் தவறவிட்ட தங்கச் சங்கிலியை மீட்ட தொழிலாளி

சாலையைப் பாதுகாப்பாக மாணவா்கள் கடக்கும் வகையில் அரசுப் பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர் பண்பாடு

SCROLL FOR NEXT