நாமக்கல்லில் புதை சாக்கடை குழியில் தவறிவிழுந்த நான்கு வயது சிறுவன் வியாழக்கிழமை இறந்தாா்.
நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் புதை சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நான்காவது வாா்டுக்கு உள்பட்ட சின்னமுதலைப்பட்டி கடக்கால் பகுதியில் இத்திட்டத்துக்காக புதன்கிழமை குழி தோண்டப்பட்ட நிலையில், அதில் நீரூற்று உருவாகி தண்ணீா் நிரம்பியது. இதனால், குழியைச் சுற்றிலும் எச்சரிக்கையாக கம்புகள் நடப்பட்டன.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த மணிகண்டன் - ரதி தம்பதியின் மகன் ரோகித் (4) அந்தக் குழிக்குள் தவறிவிழுந்தாா்.
சிறுவன் காணாததால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா் தேடிய போது, புதை சாக்கடை குழிக்குள் விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நாமக்கல் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.