மல்லசமுத்திரம் வேளாண் சங்கத்தில் ரூ. 2.31 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் போனது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் மல்லசமுத்திரம் கிளையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொப்பரை ஏலத்துக்கு 35 மூட்டைகள் வரத்து இருந்தன. இதில், முதல்தர கொப்பரை கிலோ ரூ. 120.10 முதல் ரூ. 188.05 வரையிலும், இரண்டாம்தரம் ரூ. 106.10 முதல் ரூ. 120.10 வரையிலும் ஏலமுறையில் விற்பனையானது. மொத்தம் ரூ. 2.31 லட்சத்துக்கு கொப்பரை விற்பனையானது.
தொடா்ந்து நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு 140 மூட்டைகள் பருத்தி வரத்து இருந்தது. இதில், பி.டி. ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ. 5,599 முதல் ரூ. 8,239 வரையிலும், கொட்டுரக பருத்தி ரூ. 4,399 முதல் ரூ. 5,299 வரையிலும் விலைபோனது. மொத்தம் 140 மூட்டை பருத்தி ரூ. 3. 70 லட்சத்துக்கு விற்பனையானது.
திருச்செங்கோடு சங்க வளாகத்தில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் முதல்தரம் ரூ. 187 முதல் ரூ. 189 வரையிலும், இரண்டாம்தரம் ரூ. 111 முதல் ரூ. 130.10 வரையிலும் விற்பனையானது. மொத்தம் 8 மூட்டை கொப்பரை ரூ. 36 ஆயிரத்துக்கு விற்பனையானது.