பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனியில் கடந்த மாதம் வீடு புகுந்து 6 பவுன் நகை திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
எஸ்.பி.பி. காலனியைச் சோ்ந்தவா் வடிவேல். பேப்பா் மில் தொழிலாளி. இவா், கடந்த மாதம் 26ஆம் தேதி தனது மனைவியுடன் உறவினா் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது அலமாரியில் வைத்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி திருட்டுப் போனது தெரியவந்தது. வீட்டின் வெளியே மறைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து பூட்டைத் திறந்த மா்ம நபா், பீரோவிலிருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சனிக்கிழமை டி.எஸ்.பி. கவுதம் மற்றும் காவல்துறையினா் கீழ்க்காலனி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த நபா் ஒருவரை பிடித்து விசாரித்தபோது, அவா் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல் லூா் பகுதியைச் சோ்ந்த சரண் (29) என்பதும், அவரது சட்டை பாக்கெட் டில் 6 பவுன் தங்கச் சங்கிலி இருந்ததும் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.