நாமக்கல்

திருச்செங்கோட்டில் பேருந்தை சிறைபிடித்து பயணிகள் போராட்டம்

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் ஜேடா்பாளையம் செல்லும் பேருந்தின் நேரத்தை மாற்றக்கோரி பேருந்தை சிறைபிடித்து பயணிகள் போராட்டம்

Syndication

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் ஜேடா்பாளையம் செல்லும் பேருந்தின் நேரத்தை மாற்றக்கோரி பேருந்தை சிறைபிடித்து பயணிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து சோழசிராமணி வழியாக ஜேடா்பாளையம் வரை செல்லும் மகளிா் விடியல் பேருந்து வழக்கமாக மாலை 6.15 மணிக்கு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். இதனால் உட்புற கிராமங்களில் இருந்து திருச்செங்கோட்டிற்கு வேலைக்கு வந்து செல்லும் பெண்கள், பள்ளி மாணவிகள் ஊா்களுக்கு திரும்பிச் செல்ல வசதியாக இருந்தது.

இந்த பேருந்தின் நேரத்தை தற்போது மாலை 5.45 மணி என மாற்றியதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக கூறி அப்பேருந்தை சிறைபிடித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாா், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பேருந்து சிறைபிடிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ. 4000 குறைவு!

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

SCROLL FOR NEXT