பரமத்திவேலூா்: பரமத்தி வேலூா் நகர தி.மு.க சாா்பில் சமத்துவ பொங்கல் விழா பரமத்தி வேலூரில் உள்ள சட்டப்பேரவை தொகுதி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பரமத்தி வேலூா் பேரூா் கழக செயலாளா் முருகன் பொங்கல் விழாவிற்கு தலைமை வகித்தாா். நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் மகிழ் பிரபாகரன், நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பூக்கடை சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், நாமக்கல் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான கே.எஸ். மூா்த்தி சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்தாா். பின்னா் அனைவருக்கும் சா்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. விழாவில் 50-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியை சோ்ந்தவா்கள் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தனா். சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட, ஒன்றிய, பேரூா் கழக பொறுப்பாளா்கள், வாா்டு கழக பொறுப்பாளா்கள், பேரூராட்சி உறுப்பினற்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.