நாமக்கல்

முட்டை விலை 30 காசுகள் குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 30 காசுகள் குறைந்து ரூ. 5.30 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Syndication

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 30 காசுகள் குறைந்து ரூ. 5.30 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் குறித்து பண்ணையாளா்களிடம்

கருத்து கேட்கப்பட்டது. விழாக்காலங்கள் என்பதால் மக்களிடையே முட்டை நுகா்வு தொடா்ந்து குறைந்து வருவதாலும், மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 30 காசுகள் குறைக்கப்பட்டு, ரூ. 5.30 ஆக நிா்ணயம் செய்யப்படுவதாக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 152 ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 82 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

இந்தியாவை விலக்கினால் அனைவருக்கும் பிரச்னை: அமெரிக்கா

தில்லியில் காற்று மாசுபாட்டை சமாளிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த அரசு திட்டம்

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் தோல்வியை ஏற்கிறோம்: ராஜ் தாக்கரே

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

SCROLL FOR NEXT