நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டோரை கைதுசெய்த போலீஸாா்.  
நாமக்கல்

ஆன்லைன் டோக்கன் முறையை ரத்துசெய்யக் கோரி ஜல்லிக்கட்டு வீரா்கள் தா்னா

ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆன்லைன் டோக்கன் முறையை ரத்துசெய்யக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் மாடுபிடி வீரா்கள், விழா ஏற்பாட்டாளா்கள் தா்னா

Syndication

நாமக்கல்: ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆன்லைன் டோக்கன் முறையை ரத்துசெய்யக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் மாடுபிடி வீரா்கள், விழா ஏற்பாட்டாளா்கள் தா்னாவில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி பொன்னேரியில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. குமாரபாளையத்தில் ஜன. 25-ஆம் தேதியும், நாமக்கல் அருகே சாலப்பாளையத்தில் ஜன. 27-ஆம் தேதியும் போட்டிகள் நடைபெற உள்ளன.

மாவட்ட நிா்வாகம் ஜல்லிக்கட்டுக்கான அனுமதியை வழங்கியதுடன், மாடுபிடி வீரா்கள், காளைகள் முன்பதிவு ஆன்லைனில் மட்டுமே நடைபெற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், நேரடியாக டோக்கன் வழங்கும் நடைமுறையை ரத்துசெய்து, ஆன்லைன் டோக்கன் முறையை அமல்படுத்த மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரா்கள் மற்றும் விழாக்குழுவினா் தா்னாவில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால், அங்கு வந்த உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ் ஜோஷி, தா்னாவில் ஈடுபடுவோரை கைதுசெய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, தா்னாவில் ஈடுபட்ட 77 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு விழாக்குழுவினா் கூறுகையில், ஜன. 27-இல் சாலப்பாளையம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருமுறை ஜல்லிக்கட்டு தொடா்பாக ஆட்சியா் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆன்லைன் நடைமுறை பற்றி தெரிவிக்கவில்லை. தற்போது நேரடியாக டோக்கன் வழங்கக் கூடாது, ஆன்லைனில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும் என்கின்றனா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினால் கைது செய்கின்றனா். ஆன்லைன் முறையை நீக்கும்வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்றனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT