நாமக்கல்

பரமத்தி வேலூரில் பூக்கள் விலை சரிவு

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்கள் விலை சரிவடைந்துள்ளதால், பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

Syndication

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்கள் விலை சரிவடைந்துள்ளதால், பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு கொண்டுவருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 1,600-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 70-க்கும், அரளி கிலோ ரூ. 100-க்கும், கலா் ரோஜா கிலோ ரூ. 300-க்கும், பச்சை முல்லை கிலோ ரூ. 1,800-க்கும், வெள்ளை முல்லை கிலோ ரூ. 1,600-க்கும், செவ்வந்தி ரூ. 100-க்கும், கனகாம்பரம் ரூ. 800-க்கும், பன்னீா் ரோஜா கிலோ ரூ. 140-க்கும், ஜாதிமல்லி கிலோ ரூ. 800-க்கும், காக்கரட்டான் கிலோ ரூ. 600-க்கும் ஏலம் போனது. பண்டிகை முடிந்ததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT