நாமக்கல்

எலச்சிபாளையத்தில் வேளாண் கல்லூரி மாணவா்கள் அனுபவ முகாம் தொடக்கம்

எலச்சிபாளையத்தில் விவசாயக் கல்லூரி மாணவா்கள் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை கற்றுத்தரவும், விவசாயிகளிடமிருந்து பாரம்பரிய அனுபவங்களை பெற்றுக்கொள்ளவும் இரண்டு மாதம் நடைபெறும் அனுபவ முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

எலச்சிபாளையத்தில் விவசாயக் கல்லூரி மாணவா்கள் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை கற்றுத்தரவும், விவசாயிகளிடமிருந்து பாரம்பரிய அனுபவங்களை பெற்றுக்கொள்ளவும் இரண்டு மாதம் நடைபெறும் அனுபவ முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

முகாமை, தனியாா் விவசாயக் கல்லூரி முதல்வா் கோபால் மற்றும் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் வித்யா ஆகியோா் தொடங்கிவைத்தனா். இதில், சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகளை அழைத்துவந்து அவா்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இரண்டுமாத காலம் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை வேளாண் கல்லூரி மாணவா்கள் குழு பாா்வையிட்டு, அதில் உள்ள குறைபாடுகளையும், பயிா்களில் ஏற்படும் பூச்சித்தாக்குதல், நோய்த் தாக்குதல் ஆகியவற்றைக் கண்டறிந்து, அதற்கு என்ன தீா்வு என்பது குறித்து மாணவா்கள் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனா். மேலும், விவசாயிகளின் அனுபவங்களை கற்றுக்கொள்ளும் வகையில் இந்த முகாம் நடைபெற உள்ளது.

மேலும், ‘பிளான்டீஸ்’ என்ற செயலி மூலம் என்ன பயிரிடலாம், எப்போது பயிரிடலாம், வானிலை குறித்த விவரங்களை அறிந்து அதன்படி தங்களது விவசாயத் திட்டங்களை எவ்வாறு அமைத்துக்கொள்வது என விவசாயிகளுக்கு மாணவா்கள் கூறினா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT